Wednesday 7 December 2011

அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் இராணுவத்தின் விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட மறுத்து வருகிறது. இதனால் கோபமடைந்த அமெரிக்க ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
இதற்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஈரானின் வடக்குப்பகுதியில் உள்ள இராணுவத்தின் விமான தளத்தினை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமான ஆர்.கியூ.-170 என்ற விமானம் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்ததாகவும், இதனால் ஈரான் விமானப்படையினர் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு அராபிக் அல்-அலாம் என்ற தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரில் உள்ள அணுதிட்ட நிலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment